Advertiment

சமயபுரம் கோவிலில் 9 நாளில் ரூ1.04 கோடி ரொக்கம், 2.055 கிராம் தங்கம்,3.080 கிராம் வெள்ளி காணிக்கை.

by Editor

ஆன்மீகம்
சமயபுரம் கோவிலில் 9 நாளில் ரூ1.04 கோடி ரொக்கம், 2.055 கிராம் தங்கம்,3.080 கிராம் வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி தங்கம், வெள்ளி என காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம்.அம்மன் குடிகொண்ட ஆன்மிக  தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில்  இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் 37 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.இதில் ஒரு கோடியே 04 லட்சத்து 73 ஆயிரத்து 444 ரூபாய் ரொக்கமும் ,2 கிலோ 55 கிராம் தங்கமும்,3 கிலோ 80 கிராம் வெள்ளி, அயல் நாட்டு நோட்டுகள் 235, அயல்நாட்டு நாணயங்கள் 1812 உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டதை அதிகாரிகள் முறைப்படி எண்ணி வரவு வைத்தனர்.

Share via

More Stories