Advertiment

இஸ்லாம்,கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 8 பேர்  இந்து மதத்திற்கு திரும்பினர்

by Editor

ஆன்மீகம்
இஸ்லாம்,கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 8 பேர்  இந்து மதத்திற்கு திரும்பினர்


தென்காசி மாவட்டம் கழுகுமலையைசேர்ந்த 4 பேர்,நெல்லை மாநகரைசேர்ந்த 4 பேர் என மொத்தம் 8 பேர்
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்  V.P.ஜெயக்குமார் தலைமையில்,மாநில செயலாளர் கா.குற்றாலநாதன்முன்னிலையில்,ஸ்ரீ வைகுண்டம் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 103 வது குருமகா சன்னிதானம் எழுந்தருளி  தாய் சமயம் திரும்பினர்.இவர்களுக்கு  புனித நீர் தெளித்து சடங்குகள் செய்து உறுதிமொழி ஏற்று சான்றிதழ் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இந்துமுன்னணி நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம் நெல்லை மாவட்ட செயலாளர் சுடலை, இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், இந்து வழக்கறிஞர் முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் செல்வி தனலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

Share via