Advertiment

உதகை,கொடைக்கானலில் பொங்கல் தொடர் விடுமுறை சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

by Editor

சுற்றுலா
உதகை,கொடைக்கானலில் பொங்கல் தொடர் விடுமுறை சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு.மோயர் சதுக்கம், பைன் மர சோலை,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்புசுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்தனர்.

இதில் உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான தென்னிந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலை சிகரத்தில்  அமைந்துள்ள காட்சி முனையை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதல் குவிந்தனர்.

மேலும் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி டெலஸ்கோப் கருவி மூலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த மலைகளையும், பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வனப்பகுதிகளையும், மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் எல்லை பகுதிகளையும் கண்டு ரசித்தும் செல்பி புகைப்படங்கள்எடுத்தும், உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து விடுமுறை நாளைகொண்டாடி மகிழ்ந்தனர்.
 

Share via