Advertiment

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

by Editor

ஆன்மீகம்
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்து அறநிலையத்துறையினுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது பராசக்தி மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்..இந்த கல்லூரியில் 1962ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பாவை நோன்பு கடைபிடிக்கப்பட்டு ஆண்டாள் திருமணம் கோலகாலமாக நடப்பது வழக்கம் இந்த ஆண்டு மார்கழி மாதம் முதல் தேதி முதல் பாவை நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.நோன்பின் 29ஆவது நாளான இன்று ஆண்டாள் ரங்க மன்னார் திருமணம் கல்லூரியிலுள்ள தியான மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பாவை திருவெம்பாவையை  மாணவிகள் பாடினர். இதனை தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம் மாங்கல்ய அணிவித்தல், பூப்பந்து விளையாட்டு உள்ளிட்ட அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் நடந்தன, நிகழ்ச்சியை  சாஸ்திரி நடத்தி வைத்தார்,. மணமக்களாக கல்லூரி மாணவிகள் வேடம் அணிந்து இருந்தனர். திருமணம் முடிந்ததும் விருந்து மொய் எழுதுதல், கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம்  வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள்  திரளாக  ஒரு கலந்து கொண்டனர்..

Share via

More Stories