Advertiment

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்:  ராஹி சர்னோபத் தங்கப் பதக்கம்

by Editor

விளையாட்டு
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்:  ராஹி சர்னோபத் தங்கப் பதக்கம்

 


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார்.


குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் ராஹி சர்னோபத் 39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார். பிரான்ஸின் மெதில்டே லமோலே 31 புள்ளிகளுடன் வெள்ளியும், ரஷியாவின் விடாலினா பத்சராஷ்கினா 28 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்திய வீராங்கனையான மானு பாக்கர் 11 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து ஏமாற்றமளித்தார். இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கமாகும். முன்னதாக ஒரு வெள்ளி, இரு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via