Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்.

by Admin

ஆன்மீகம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்.

1) இந்திரலிங்கம்

கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.

2) அக்னிலிங்கம்

இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.

3) எமலிங்கம்

கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.

4) நிருதிலிங்கம்

மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5) வருணலிங்கம்

ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.

6) வாயுலிங்கம்

இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.

7) குபேரலிங்கம்

7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.

8) ஈசான்யலிங்கம்

கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும்.

Share via