Advertiment

வெற்றியில் திளைத்த ராவணன்

by Admin

ஆன்மீகம்
வெற்றியில் திளைத்த ராவணன்

 


தேவர்களைக் கொடுமைப்படுத்த தொடங்கினான் ராவணன்.அவன் கொடுமைகளைத்தாங்கிக்கொள்ள இயலாத தேவர்கள் அழுதார்,கதறினார்கள்.தங்களை இந்த மீளாத்துயரிலிருந்து காப்பாற்றும் வல்லமை திருமாலுக்கு மட்டும் தான் உண்டு என்று கருதி,அனைத்துத் தேவர்களும் ஒன்று கூடி திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளுி கொண்டத் திருமாலை தரிசித்தார்கள்.

அவரிடம் தம் வேண்டுகோளை,"காக்கும் கடவுளே! ராவணன் உள்ளிட்ட அரக்கர்களால்
மூவுலகும் துன்பப்படுகிறது.எங்கு வேள்வி நடந்தாலும் அதை அழிக்கிறார்கள்.அவர்களின் கொடுமைகளை எங்களால்தாங்க முடியவில்லை நீங்கள்தான் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர்.

ஆயிரமாயிரம் தாமரை மலர்ந்தால் எப்படி அழகொளிருமோ அப்படியொரு முகம் புன்னகையால் பூக்க..சிறிது நேரம்மெளனம் காத்தார் .பிறகு பூலோகத்தில் தசரதன் புத்திரகாமேஷ்டி யக்ஞத்தை நடத்த இருப்பதால்,தாமே தசரதனின் புதல்வனாய் அவதரித்து ராவணனின் பூலோக கொடுமைகளை அழிப்பதாக ஸ்ரீ நாராயண மூர்த்திஅருளினார்.இந்த இனிய செய்தியைக்கேட்ட தேவர்கள் திருமாலை வணங்கி விடைபெற்றனர்.
.........தசரதன் யாகம் செய்ய வேலைகளைத்தொடங்கினான்..,...

அயோத்தில், தசரதன் அமைச்சர்களை அழைத்து  குலம் தழைக்க புத்திர பாக்கியம் பெற.வழி சொல்ல கேட்டான்.அமைச்சர்கள் புத்திரகாமேஷ்டி யக்ஞம்  செய்தால் பிள்ளை பேறு அடைமுடியும் என்றார்கள்.அந்த யாகத்தைதிறம்படச்செய்யும் ஆற்றல் பெற்ற ரிஷ்ய சிருங்கரை மாமன்னன் அணுக முடிவெடுத்து அவரைச்சந்திக்கிறார்.

தம் மனக்குறையை முனிவரிடம் கூற..அவரும் யாகம் செய்ய ஒத்துக்கொண்டார்.

Share via

More Stories