Advertiment

மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

by Editor

சுற்றுலா
மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 60 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது, இந்த வனப்பகுதிகளில் அரிய வகை விலங்கினங்களும், பறவை இனங்களுக்கு ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் மலபார் அணில்கள்(பறவை அணில்) கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது, இதனையடுத்து மலபார் அணில்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் வான்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்துள்ளதால் பரவலாக வன உயிரினங்கள் இனப்பெருக்கம் அதிகரித்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால் அத‌ன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குவ‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து, மேலும் இந்த அணில்கள் மரங்களில் மட்டும் வாழ கூடியவையாகும், மலைச்சாலை ஓரங்களில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களில் முகாமிடும் மலபார் அணில்களை மலைச்சாலையில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ஆர்வ‌முட‌ன் பார்த்து ர‌சித்து செல்கின்றனர்.
ஒரு சிலர் இந்த அரிய‌ வ‌கை மலபார் அணில்களை அதிக‌ளவில் அச்சுறுத்தி வ‌ருவ‌துட‌ன் வ‌ன‌ப்ப‌குதிக‌ளில் உள்ள‌ ம‌ர‌ங்க‌ளில் ஏறி மல‌பார் அணில்க‌ளை வேட்டையாட‌ முய‌ற்சிப்ப‌தாக‌வும் கூற‌ப்படுகின்ற‌து.
இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி அரிய‌ வ‌கை மலபார் அணில்களை பாதுகாக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது புலிச்சோலை பகுதியில் அதிக அளவில் தென்படும் மலபார் அணில்களை பாதுகாக்க இந்த பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தவும், ம‌ல‌பார் அணில்க‌ளை பாதுகாக்க  ம‌லைச்சாலைக‌ளில் ம‌ல‌பார் அணில்க‌ளின் புகைப்ப‌ட‌த்துட‌ப் கூடிய‌ விழிப்புண‌ர்வு ப‌தாகைக‌ள் வைக்க‌ வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Share via