Advertiment

நல்ல மணவாழ்க்கை அமைய மாங்காடு காமாட்சி அம்மன் தரிசிக்கலாம்!

by Editor

ஆன்மீகம்
நல்ல மணவாழ்க்கை அமைய மாங்காடு காமாட்சி அம்மன்  தரிசிக்கலாம்!

நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

ஆன்மிகத்தில் ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மறைத்தார். அப்போது உலகமே இருளில் மூழ்கியது. இதற்கு பரிகாரமாக பார்வதி பூமிக்கு வந்து தவத்தில் ஈடுபட்டார். தன் இதயத்தில் ஆத்மலிங்கமாக சிவனை பூஜித்தார். பார்வதியை மீண்டும் கயிலாயம் வரவழைக்க வேண்டும் என தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அதை ஏற்று பூமிக்கு வந்து பார்வதியின் சகோதரரான திருமாலிடம் உனது தங்கையை தாரை வார்த்துக் கொடுக்கச் சொல்லி திருமணம் புரிந்தார்.

மாமரங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் திருமணம் நடந்ததால் மாங்காடு அம்மன் என்று அழைக்கப்பட்டார். மேலும் அம்மனுக்கு ஆதிகாமாட்சி என்றும் பெயரிடப்பட்டது. சிவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த திருமால் வைகுண்ட பெருமாள் என்னும் பெயரில் கோவில் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு சென்று வழிபாடு செய்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். எனவே ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்து கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு நல்ல மணவாழ்க்கை கிடைக்கும்.

Share via

More Stories