Advertiment

ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

by Editor

ஆன்மீகம்
ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

தமிழ் மாதமான ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகள் நடக்கும். இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories