Advertiment

திருப்பதி பிரமோற்சவம் ஏழாம் நாள் விழா.

by Editor

ஆன்மீகம்
திருப்பதி பிரமோற்சவம் ஏழாம் நாள் விழா.

திருப்பதி  பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று, தங்க சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயண அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சூரிய பிரபை வாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தை அடைந்தார்.
தொடர்ந்து சூரிய நாராயணராக அலங்காரத்தில் உற்சவர், தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

தீப ஆராதனைகளைத் தொடர்ந்து, கோவில் மாடவீதிகளில் சாமி புறப்பாடு நடைபெற்றது. சூரியனின் ஏழு கதிர்களை ஏழு குதிரைகளாக கொண்ட மலையப்ப சுவாமியின் தங்க சூரிய பிரபை வாகன சேவையை, மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

அப்போது நான்கு மாட வீதிகளில் இருபுறம் உள்ள பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா...  எனும் முழக்கத்துடன் ஹாரத்தி கொடுத்து வழிபட்டனர்.இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு ,ஆந்திரா , ராஜஸ்தான், குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள்
 மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும்  நடனம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.ஏழாம் நாளான இரவு சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்துள்ளார்.

Share via

More Stories