Advertiment

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு

by Editor

ஆன்மீகம்
 சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு

 சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு நவராத்திரி தொடக்க தினமான இன்று சிறப்பு பூஜை யோடு தொடங்கப்பட்டது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 30 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. செப்.26-ம் தேதி தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.4-ம் தேதி வரை நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.கொலுவில் ஸ்ரீநடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார்  2500 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். நவராத்திரி கொலு குறித்து கோயில்  தீட்சிதர் தெரிவித்ததாவது: ஒரறிவு முதல் ஆறறிவு வரை மனிதன் பரிணாம  வளர்ச்சிகளை விவரித்து இறைவனை வணங்கும் வண்ணம் இந்த கொலு வைத்து பூஜிக்கப்படுவதாக  என தெரிவித்தார்.

Share via

More Stories