Advertiment

குருவாயூர் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்த முகேஷ் அம்பானி

by Editor

ஆன்மீகம்
குருவாயூர் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்த முகேஷ் அம்பானி

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். பின்னர் அவர் கோவில் அதிகாரிகளிடம் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். சாமி தரிசனம் முடிந்ததும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு காணிக்கையாக ரூ.1 கோடியே 51 லட்சத்திற்கு காசோலை வழங்கினார். அவர் வழங்கிய காணிக்கை கோவில் அன்னதான திட்டத்திற்கு செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் தரிசனம் செய்த நிலையில் தற்போது குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories