Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உலக செஸ் போட்டியில் தமிழக வீரர் தகுதி!

by Editor

விளையாட்டு
 உலக செஸ் போட்டியில் தமிழக வீரர் தகுதி!

ரஷ்யாவில் நடைபெறவுள்ள செஸ் உலக கோப்பை 2021 போட்டியில் பங்கேற்க, தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தகுதி பெற்றுள்ளார். FIDE உலக கோப்பை 2021 சதுரங்க போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில்நடைபெறவுள்ளது (ஜூலை 10 - ஆகஸ்ட் 3). அதில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் வீரரை தேர்வு செய்வதற்கான போட்டி (மே 26 - 30) அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.

முன்னனி வீரர்கள் 17 பேர் இதில் பங்கேற்றனர். 16 சுற்றுகளாக நடந்த போட்டியில் தமிழக வீரர், ஈரோட்டை சார்ந்த கிராண்ட் மாஸ்டர் ப. இனியன் 12.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கிராண்ட் மாஸ்டர்கள் பி.அதிபன், எஸ்.எல்.நாராயணன், டி.குகேஷ், விஷ்ணு பிரசன்னா உட்பட 12 வீரர்களிடம் வெற்றியும், கிராண்ட் மாஸ்டர் சேதுராமனிடம் டிரா செய்தும் 12.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இனியன், ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்வு பெற்றுள்ளார்

Share via