Advertiment

மல்யுத்த வீரர் சுசில்குமார் பத்மஸ்ரீ விருது பறிப்பு?

by Editor

விளையாட்டு
மல்யுத்த வீரர் சுசில்குமார் பத்மஸ்ரீ விருது பறிப்பு?

ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் சுசில்குமாருக்கு கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்ம  விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானாவுக்கும் இவருக்கும் கடந்த 4 , 5 தேதிகளில் மோதல் ஏற்பட்டது. சண்டையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரானா உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுசில் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டார்.


கொலை வழக்கில் சுசில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட பத்ம  விருதை மத்திய அரசு திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வடக்கு ரயில்வே ஊழியரான சுஷில்குமாரை ரயில்வே நிர்வாகம் நேற்று முறைப்படி பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Share via