
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் குவாரி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் சொந்த ஊரான திசையன்விளையில் அவரது வீடு அவரது மகன் வீடுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை செய்தனர்,சோதனையை கண்டித்து திசையன்விளை வியபாரிகள் கடையடைப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை, அவர்களது சொத்துக்களையும் முடக்க முடிவு செய்துள்ளதாகவும் நெல்லை எஸ்.பி. சரவணன் நிலையில் கல்குவாரியில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.