Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கொரோனா தொற்றால் டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் சந்திரசேகர் உயிரிழப்பு

by Editor

விளையாட்டு
கொரோனா தொற்றால் டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் சந்திரசேகர் உயிரிழப்பு

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஏராளமான வீரர்களை உருவாக்கிய முன்னாள் தேசிய சாம்பியன் சந்திரசேகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். சென்னையில் வசித்தவர் வேணுகோபால் சந்திரசேகர்(63). டேபிள் டென்னிஸ் வீரரான அவர் 3 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

மேலும் யுஎஸ்.சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்திருக்கிறார். இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி தன்னை கவுரவித்துக் கொண்டது. எஸ்.ராமன், ஜி.சத்யன், ஆர்.எஸ்.ராஜா, வி.சீனிவாசன் என ஏராளமான வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார். சந்திரசேகர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவுமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சந்திரசேகர் மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள 1984ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு, ஆள் மாற்றி மயக்கமருந்து தந்ததால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் 36 நாட்கள் கோமாவில் இருந்தார். மொத்தம் 81 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவருக்கு பேச்சு, பார்வை, நடை எல்லாம் பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விளையாட முடியாமல் போன சந்திரசேகர் இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். மருத்துவமனை மீது அவர் தொடர்ந்த வழக்கில்  ரூ.17.37லட்சம் இழப்பீடு வழங்க 1993ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share via