
-மாணவர்களின் கல்வி - உலக வங்கி கவலை
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் மனித வளம் மிக முக்கியனது. தனி மனித பொருளாதார மேம்பாட்டில் கல்வியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நிலவளம்,நீர்வளம் போல் அறிவுசார் தொழில்நுட்ப வளம் இன்றைக்கு உலகை கோலோச்சி கொண்டிருக்கிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக ,உலகமெங்கும் பரவிய கொரோனா இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியிருக்கிறது.அதற்குக்காரணம் பள்ளிகள் மூடிக்கிடப்பதே.இது குறித்து கவலை கொண்ட உலக வங்கி,யுெனஸ்கோ,யுனிசெப்புடன் இணைந்து ஓர் அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது.அதில், கொரோனா நெருக்கடி உலகெங்கிலும் கல்வி அமைப்பை சீர்குலைத்துள்ளது.தற்போது 21 மாதங்கள் ஆகி விட்ட நிலையில்,லட்சக்கணக்கான குழந்தைகளுக்கான பள்ளிகள் இன்னமும் மூடியே இருக்கின்றன. பலரும் மீண்டும் பள்ளிக்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது.பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளமுடியாதது.கற்றல் குறைபாட்டிற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பது,இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும்இளைஞர்கள் அவர்களது குடும்ப பொருளாதார எதிர்கால உற்பத்தி,வருவாய்,நல்வாழ்வு ஆகியவற்றுக்கான எதிர் விளைவை உருவாக்கும்.இந்த தலைமுறை குழந்தைகள் வருவாய் சம்பாதிப்பதில்
ஏழ்மையைக்கொண்டு வரும் ஆபத்து உள்ளது.இந்திய கிராமத்து மாணவர்கள்,பிரேசில்,பாகிஸ்தான்,மெக்சிகோ,
ஆப்பிரிக்கா மாணவர்கள் கணிதம்,வாசிப்பில் பின்னடைவை சந்தித்துள்ளனர். குறைந்த-மத்திம வருமானமுடைய நாடுகளில் 20கோடிக்கு அதிகமான மாணவர்கள் தொலை நிலை கல்வியை பெரும் நிலையில் இல்லை.அதனால்,மீண்டும்பள்ளிகளை திறப்பது மூலமே முந்தைய தலை முறையினரின் திறனை பெற முடியும்,