இன்று சென்னை ஐ.ஐ.டி புகழ்பெற்ற வருடாந்திர தொழில்நுட்ப திருவிழாவான சாஸ்திர 2026 கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜனவரி ஆறு வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு இடையிலான ரோபாட்டிக்ஸ், கோடிங், ஏரோ மாடலிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம் கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த கருத்து அரங்கில் உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகள் தொழில் முனைவோர்கள் உரையாற்ற உள்ளனர். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகளின் காட்சிப்படுத்துதலையும் இந்நிகழ்வில் காணலாம்.