Advertiment

பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வு வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை

by Admin

கல்வி
பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வு வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை

பாலிடெக்னிக்  விரிவுரையாளர் தேர்வு வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை
ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில்,"அரசு பல்தொழில் நுட்பக்கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு  நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்த தேர்வுகள்8.12.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 8.ஆம் தேதி அன்றைய தேர்வு சார்பாக வாட்ஸ்ஆப்பில் தகவல் மற்றும் தொலைக்காட்சிகாட்சிகளில் செய்தி வெளியாகி யுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கிலப்பாட வினாத்தாள் முடிந்த உடனேயே வாட்ஸ் ஆப்பில் விடைகள் குறிப்பிட்டு வினாத்தாள் தேர்விற்கு முன்பே வெளி வந்ததாக audio message ல் தரப்பட்டுள்ளது.இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.தேர்வு மையத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் வினாத்தாள்,ஒவ்வொரு  தேர்வருக்கும் வினாக்களும்வினாக்களுக்கான விடைகளும் randomize செய்யப்படுகிறது.இத்தேர்வருக்கு  வழங்கப்படுவது போல மற்ற தேர்வர்க்கு இருக்க 100சதவிகிதம் வாய்ப்பல்லை.மேலும் ,இதில்,மிகக்கடுமையான பாதுகாப்பு அம்சங்களும் பின் பற்றப்படுகின்றன. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு வெள்ளைத்தாள் மற்றும் பேனா அல்லது பென்சில் வழங்கப்படுவது நடைமுறையாகும் பூர்ணிமா தேவி,நாமக்கல் என்ற தேர்வர் இத்தாளினை பயன்படுத்தி கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை எழதி அதனை மையத்தில் ஒப்படைக்காமல் எடுத்துச்சென்று  வாட்ஸ்ஆப்பல் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது, வாட்ஸ்ஆப்பில் பெறப்பட்ட கையினால் எழுதப்பட்ட 8பக்கங்களில் உள்ள வினாக்களின் எண் வினாக்கள மற்றும் விடைகளும் தேர்வருக்கு தேர்வின் போது வழங்கப்பட்ட வினாத்தாளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் அனைத்து வினாக்களும ஒன்றாகவே உள்ளன.விடைகளும் வரிசை மாறாமல் அப்படியே உள்ளது.

Share via

More Stories