Advertiment

கடவுளாலும் குருவாலும்  ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?  - ரமண மகரிஷி

by Admin

ஆன்மீகம்
கடவுளாலும் குருவாலும்  ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?  -  ரமண மகரிஷி

கடவுளாலும் குருவாலும்  ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா? 

கடவுளும்  குருவும்  முக்தியை அடைவதற்கு வழியைக் காட்டுவார்களே அல்லாமல், தாமாகவே ஜீவர்களை
முக்தியில்  சேர்க்கார். கடவுளும்   குருவும்  உண்மையில் வேறல்லர்.புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதே,அவ்வாறே  குருவின் அருட்பார்வையிற்பட்டவர்கள்  அவரால் ரட்சிக்கப்படுபவரே அன்றி  ஒருக்காலும்  கைவிடப்படார்;எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு  காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தி அடைய வேண்டும்.தன்னுடைய ஞானக்கண்ணால்,தானே அறிய வேண்டுமே அல்லாமல்பிறர் எப்படி அறியலாம்?
ராமன் என்பவன்    தன்னை ராமன் என்று  அறிவதற்கு  கண்ணாடி  வேண்டுமே ?
                                                                                

                                                                                                                 

Share via