Advertiment

மாநிலக்கல்லூரியில் ஐந்து நாள் கருத்தரங்கு

by Editor

கல்வி
மாநிலக்கல்லூரியில் ஐந்து நாள் கருத்தரங்கு

சென்னை மாநிலக்கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பாக  ஐந்து நாள் கருத்தரங்கு  நாளை 22.11.2021 திங்கள் கிழமை காலை பதினோறு மணியளவில் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக,"சுதந்திர போராட்டத்தில்  சிறுபான்மையினரின் பங்கு" எனும் தலைப்பில் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கருத்துரை வழங்குகிறார். இரண்டாம் நாள்,"சுதந்திர போராட்டத்தில் பண்டித நேருவின் பங்கு"எனும் தலைப்பில் ஏ.கோபண்ணா கருத்துரை வழங்குகிறார்.

இதனைத்தொடர்ந்து  சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு எனும் தலைப்பில் எழுத்தாளர் கடற்கரை, காந்தியடிகளின் மூன்று இயக்கங்களும் பதினேழூ சத்தியாகிரகங்களும் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சித்ரா பால சுப்பிரமணியன், சுதந்திர போராட்ட காலமும் சமூக நீதியும் எனும் தலைப்பில் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கருத்தரங்க  தலைமை  கல்லூரி முதல்வர் இரா. ராமன். ஒருங்கிணைப்பாளர் வெ.மாரப்பன் மற்றும்  பேராசிரியர்கள் நவநீத கிருஷ்ணன், கு.வத்சலா, கோ. ரகுபதி, இராேஜந்திரன் ஆகியோர் கருத்தரங்க பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Share via

More Stories