
30 10 2021 காலை 10 மணி அளவில் சென்னை மாநிலக் கல்லூரியின் தாவரவியல் துறையில் மன அழுத்தம் அற்ற புகழ் என்ற தலைப்பில் பேராசிரியர் நமிதா குமாரி அவர்கள் இணைய வழி தேசிய கருத்தரங்கில் உரையாற்றினார். தற்போது இருக்கும் வேகமாக செல்லும் வாழ்க்கை சூழலில் மன அழுத்தமற்ற வாழ்வை எப்படி வாழலாம் என்று மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
இந்த கருத்தரங்கு தாவரவியல் துறைத்தலைவர் முனைவர். இரா. தாமோதரன் அவர்கள் வரவேற்புரை அளித்தார் பின்பு மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர். இரா ராமன் அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு பேராசிரியர்கள் முனைவர். ப. ஸ்ரீபிரியா மற்றும் முனைவர். பா. சங்கரன் ஆகிய அமைப்புச் செயலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.