Advertiment

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

by Admin

சினிமா
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக  ஐஸ்வர்யா ராஜேஷ்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Share via