Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

பருவமழையை எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

by Editor

சினிமா
பருவமழையை எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது.


தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடையாதவாறு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். வருமுன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் எங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.


அனைத்து துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கி உள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் 1ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 393.4 மில்லி மீட்டர் மழை கிடைத்து உள்ளது. இது 17 சதவீதம் அதிகமாகும். தென் மேற்கு பருவமழை காலத்தில் 34 உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 396 குடிசைகள் சேதம் அடைந்து உள்ளது. நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.


தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை என்ற போதிலும், கடந்த 1ந் தேதி முதல் 19ந் தேதி வரை 148.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. 39 உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. 78 மாடுகளும், 68 ஆடுகளும், 12 கோழிகளும் மழையால் இறந்துள்ளன.


சேப்பாக்கத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையமும் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.


இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம். வானிலை ஆய்வு மைய செய்திகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீனவர்களுக்கு தெரிவித்து வருகிறோம்.
மீனவர்களுக்கு 600 செயற்கைகோள், தொலைபேசிகளும், இதர உபகரணங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும், டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மொத்தத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Share via