இந்திய சினிமா வரலாற்றில் துரந்தர் - 2, குறிப்பிடத்தக்க பணமாக மாறி உள்ளது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்திய திரை உலகில் மிக விரைவாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிய படங்களில் இது ஒன்றாக மாறி உள்ளது அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 படத்திற்கு இணையான வசூலை இப்படம் பெற்றுள்ளது. இந்தியாவில் 745.23 கோடி ஐயும் வெளிநாடுகளில் 261.92 கோடியையும் ஒட்டுமொத்தமாக உலக அளவில் 1,007 .15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 2025 டிசம்பரில் வெளியான துரந்தர்-1 , 1,300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.