Advertiment

கிடைத்த விருதை மறைந்த இயக்குனருக்கு சமர்ப்பித்த பாடகி

by Editor

சினிமா
கிடைத்த விருதை மறைந்த இயக்குனருக்கு சமர்ப்பித்த பாடகி

கேரளா அரசு கொடுத்த விருதை மறைந்த இயக்குனர் ஒருவருக்கு கிராமிய பாடகி சமர்ப்பணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஐயப்பனும் கோஷியும்'. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் சச்சி திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐயப்பனும் கோஷியும்' படத்தில் இடம்பெற்ற 'களக்காத்த சந்தனமேரம்' என்ற பாடலை பழங்குடியின மூதாட்டி நஞ்சியம்மாள் என்பவர் பாடியுள்ளார் இவரது அருமையான குரலுக்கு கேரள அரசு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த விருதை தன்னை முதல் முறையாக சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குனர் சச்சுஜ்ஜ்ய் அந்த விருதினை சமர்ப்பணம் செய்வதாக அவர் உருக்கமாக பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share via

More Stories