
உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்படுகிறது.
இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.
இதில் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான விருது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனெட் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே மற்றும் ஸ்காட் பிஸ்சர் ஆகிய நால்வரும் பெற்றுக்கொண்டனர்.