Advertiment

கப்பலில் போதை பார்ட்டி.ஷாருக்கான் மகன் ஆர்யனிடம் விசாரணை

by Editor

சினிமா
கப்பலில் போதை பார்ட்டி.ஷாருக்கான் மகன் ஆர்யனிடம் விசாரணை

மும்பை கடல்பரப்பில் உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்ற விவகாரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான 'எம்பிரஸ்' மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர்  அந்தக் கப்பலில் ஏறினர்.
கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்
உல்லாச கப்பலில் போதை பார்ட்டி.. சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன்

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் 'ஃபேஷன் டிவி இந்தியா' இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதுல் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அவர் கைதும் செய்யப்படவில்லை என போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஆர்யனின் மொபைலை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share via

More Stories