
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் நடிகை ஹன்சிகா அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘105 மினிட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம். திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது. இதேபோல் தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடிக்கும் ‘இரவின் நிழல்’ என்கிற படமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.