Advertiment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு:  2 ஆம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.

by Editor

கல்வி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு:  2 ஆம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.


குரூப் 4 தேர்வு 2 ஆம் கட்ட கலந்தாய்வு அக். 11 & 12 ஆம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக அரசின் காலிப்பணியிடங்கள் தேர்வுகள் வைத்து நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேர்வுகள் மற்றும் அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.


தற்போது, கொரோனா வைரஸ் பரவல் குறைந்து படிப்படியாக அனைத்து தேர்வுகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த தேர்வுகளின் நேரடி கலந்தாய்வு தேர்வுகளும், கொரோனா விதிமுறையை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், " குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதியில் நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு கிடையாது. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்களில் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் " என்று தெரிவித்துள்ளது.

Share via

More Stories