Advertiment

மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு

by Editor

கல்வி
மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு

 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி பள்ளிகளில் வழங்கப்படுமென அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.


சென்னை: இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”11ஆம் வகுப்பு மார்ச் 2021 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசியர் மூலம் வரும் 30-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட, தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.


இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டு இருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்” என குறிப்பிட்டுள்ளார். 

Share via

More Stories