
வில்லன் நடிகர் நட்ராஜ் மகள் ரஜினி நடராஜை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆரியன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. விஷ்ணு விஷால் – ரஜினி நட்ராஜ் இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.இதன்பின்னர் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் பழகி வந்தார் விஷ்ணு விஷால்.
அண்மையில் நடந்த தனது பிறந்தநாள் விழாவில் தான், தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து ஏப்ரல் 22-ஆம் தேதி (வியாழக்கிழமை ) ஜூவாலா கட்டா உடன் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் பிரம்மாண்டமான முறையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக நடந்த அந்த மெஹந்தி பங்ஷனில் விஷால், ஜூவாலா கட்டாவுக்கு அளித்த வைர மோதிரம் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இருவரின் திருமணம் புகைப்படங்களும் சமூக வலைதளங்ளில் பரவி வருகிறது.