Advertiment

உடுமலை நாராயணகவி சிலைக்கு  அமைச்சர்கள்  மரியாதை

by Editor

சினிமா
உடுமலை நாராயணகவி சிலைக்கு  அமைச்சர்கள்  மரியாதை

 


பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியரும் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவியின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.


இவர் புரவியாட்டம், தப்பாட்டம், உடுக்கையடிபாட்டு, கும்மி போன்ற கிராமிய கலைகளை கற்றார். இவர் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான சமூக சீர்திருத்த பாடல்கள் எழுதியுள்ளார். கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்ட உடுமலை நாராயணகவிக்கு 2008 ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.பின்னர் அவர் புகழை போற்றும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதி தலைமையில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுத்தது.  அவரது  123-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


இதையடுத்து உடுமலை மணிமண்டபத்தில் உள்ள நாராயணகவியின் சிலைக்கு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share via