
எனக்கும் இயக்குனர் பா ரஞ்சித்துக்கும் இடையே உள்ளது போட்டி தான் என்றும் ஆனால் அது ஆரோக்கியமான போட்டி என்றும் ’ருத்ர தாண்டவம்’ படத்தின் பிரஸ்மீட்டில் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. நாடக காதல் குறித்த இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்று ஒரு சில அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோகன் ஜி இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படம் கிறிஸ்துவ மதத்திற்கு எதிரானது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரஸ்மீட்டில் இந்த படம் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது அல்ல என்றும், அதே போல் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு எதிரானவர் நான் இல்லை என்றும் எங்களிடையே எந்த போரும் கிடையாது என்றும் எனக்கும் அவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.