
நடிகர், நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நாவல் எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகொண்ட மெல்வின் வான் பீபிள்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மான்ஹாட்டன் பகுதியில் காலமானார். `கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்' என்று போற்றப்படும் மெல்வின் வான் பீபிள்ஸ் இறந்த போது, அவருக்கு வயது 89.
1971ஆம் ஆண்டு, மெல்வின் இயக்கிய 'Sweet Sweetback's Baadasssss Song' அவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது.
இன்றுவரை அதிக லாபம் ஈட்டிய சுயாதீனத் திரைப்படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம், blaxploitation என்ற புதிய சினிமா அரசியலை அறிமுகப்படுத்தியது. Blaxploitation என்பது கறுப்பின மக்களின் வாழ்வியலை வணிக நோக்கத்திற்காக, சினிமாவாகவும், பிற படைப்புகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்வதை விமர்சிக்கும் சொல். மெல்வின் முன்வைத்த அரசியல் இன்றுவரை அமெரிக்க சினிமாவில் பேசப்படுகிறது.`கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்' என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.