
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.
இந்தியாவில் உள்ள சாதுக்களும் சன்னியாசிகளும் ஆண்டுதோறும் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இந்த விரதத்தை மேற்கொண்டார்.
அவர் உத்தரப்பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை சூழல் மிகுந்த இடத்தில் தங்கியிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். அப்போது வடமாநிலங்களில் சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாடிகள் பிடித்த பாம்பை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.அந்த வகையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாக பாம்பை அணிவித்து மரியாதை செய்தனர். இதை ஏற்ற மணவாள முனிகளும் அந்த பாம்பாடிகளுக்கு அருளாசி வழங்கினார்.