Advertiment

வரதட்சணை வாங்கினால், வழங்கினால் பட்டம் ரத்து

by Editor

கல்வி
வரதட்சணை வாங்கினால், வழங்கினால் பட்டம் ரத்து



கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையடுத்து வரதட்சணை கொடுமையை தடுக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கோழிக்கோடு பல்கலைக்கழகம், ''வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்,'' என, அறிவித்துள்ளது.


சேர்க்கை படிவம் மற்றும் பட்டம் வழங்கும் படிவத்தில், 'திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ ​​மாட்டோம்' என்ற அறிவிப்பில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கி உள்ளது. 'வரதட்சணை வாங்க மாட்டேன் என, உறுதிமொழி படிவத்தில் மாணவர்கள் கையெழுத்திட்ட பின்னரே மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் பட்டம் வழங்கப்படும்.பிற்காலத்தில் வரதட்சணை வழங்கினால் அல்லது வாங்கினால் அந்த மாணவ, மாணவியரின் பட்டம் ரத்து செய்யப்படும்' என, பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. இந்த உத்தரவு மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி கிடைத்ததும் விரைவில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories