Advertiment

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பொங்கல் ரிலீஸ் -தயாரிப்பாளர் போனி கபூர்-

by Editor

சினிமா
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பொங்கல் ரிலீஸ் -தயாரிப்பாளர் போனி கபூர்-

 

‘‘நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் தியேட்டர்களில் பொங்கலுக்கு வெளியிடப்படும்’’ என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.


வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார்.
இவர் நடித்த தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Share via

More Stories