Advertiment

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் தொழிலில் செல்வம் பெருகும்

by Editor

ஆன்மீகம்
சனிக்கிழமைகளில்  விரதம் இருந்தால் தொழிலில் செல்வம் பெருகும்

கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்தவை தான் என்றாலும், நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய நாள் கிழமைகளை விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்திட சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என அறிந்து அதனை கடைப்பிடிக்க கூடுதல் பலன்களை பெறலாம்.

அதில் மாதம் முழுவதும் கடைப்பிடிக்கும் ஒரு வகையான சந்திராம்ச விரத முறையும் உண்டு. அதாவது சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதற்கு சந்திராம்ச விரதமுறை. இதில் அமாவாசை அன்று முழு நாளும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவை அதிகரித்து பௌர்ணமியில் முழு உணவாக உண்பது தான் விரதமுறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று முழுவிரத தினமாக அமையும்.

  • ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதால் நீண்ட கால நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.
  • திங்கட்கிழமைகளில் இருக்கும் விரதத்தினால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
  • செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும்.
  • புதன்கிழமைகளில் விரதம் இருப்பதால் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.
  • வியாழக்கிழமை விரதம் இருப்பதால் குழந்தைப் பேறு சந்தான பாக்கியம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் தம்பதியர்கள் ஆதர்சத்துடன் திகழ்வதுடன் அவர்களின் ஆயுள்பலம் கூடும்.
  • சனிக்கிழமை விரதம் இருப்பதால் வேலை, தொழில் விருத்தி அடைந்து செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

Share via