Advertiment

அதிகரிக்கும் கரோனா: ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

by Editor

கல்வி
அதிகரிக்கும் கரோனா: ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு தொடர்ந்து பதிவாகிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பொதுத் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதலே, பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரவக் காரணம், கரோனா பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

காணொலி வாயிலாக பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

Share via

More Stories