Advertiment

அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் டிவியில் வாய்ப்பு?

by Editor

சினிமா
அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் டிவியில் வாய்ப்பு?

திரையுலகின் பல புதுமுக நடிகைகள் ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகி வருகின்றனர். சினிமாவில் நடிக்க வேண்டும் நாயகியாக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. சில சமயங்களில் வாய்ப்பு தேடும் பிரபலங்கள் தவறான நபர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவதும் உண்டு.

காஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் பெண்களிடம் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தவறாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் பிரபல டிவி வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அனிதா சம்பத்தின் தோழி ஒருவரிடம் பேசியுள்ளார்.இதனையடுத்து அனிதா சம்பத் அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இது போன்ற போலியான நபர்களை நம்பாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். காஸ்டிங் டைரக்டர் என்ற பெயரில் நிறைய விஷக்கிருமிகள் சமூக வலை தளங்களில் தவறான செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Share via