Advertiment

33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு

by Admin

லைப் ஸ்டைல்
 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு

மத்திய அரசு 2029-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், முக்கியமான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது.  2023-ல் நிறைவேற்றப்பட்ட  நாரி சக்தி வந்தன் அதினியம் (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்), மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே அமலுக்கு வரும் என்று நிபந்தனை விதித்திருந்தது. தற்போது இந்த நிபந்தனையை நீக்கி இடஒதுக்கீட்டைத் தனியாகப் பிரித்து உடனடியாகச் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிய 2027-28 வரை காலமாகும் என்பதால், அதற்குப் பதிலாக 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறை செய்யாமல் இடஒதுக்கீடு அளிக்கும்போது, எந்தெந்தத் தொகுதிகளைப் பெண்களுக்கு ஒதுக்குவது என்பதைத் தீர்மானிக்க குலுக்கல் முறையைப் பயன்படுத்தவும் அரசு பரிசீலித்து வருகிறது.மக்களவை இடங்களின் எண்ணிக்கையை சுமார் 816-ஆக அதிகரிக்கவும், அதில் 33% விகிதப்படி சுமார் 273 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த மாற்றங்களைச் செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை என்பதால், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இது குறித்துத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், 2029 மக்களவைத் தேர்தலிலும், அதற்கு முன்னதாக 2027-ல் நடைபெறும் உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வர வாய்ப்புள்ளது

Share via