ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு.. அதை அடைவதற்கான பல்வேறு விதங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்கால, தங்கள் ஆசைகளை, விருப்பு-வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அது அடைவது தான் தன் லட்சியம்_ குறிக்கோள் என்ற நகர்வினில் அவர்கள் காலங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. மற்றவர்களை பார்க்கையில் அவர்கள் தங்களை விட மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது .அவர்களைப் போல இவர்களும் ஏதோ ஒரு கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று. பார்க்கிற பார்வையும் வாழ்கிற வாழ்க்கையும் தான் மாறுபட்டு இருக்கிறதே தவிர யாரும் முழுமையான ஒரு சந்தோஷத்தை அடைந்ததாக சொல்லி விட இயலாது. மூச்சு முட்டுகிற அளவு பணம் சம்பாதித்தவன், பதவியையும் அதிகாரத்தையும் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான். அதிகார வலையத்திற்கு உள்ளே சிக்கி நிம்மதியை இழந்து கொண்டிருப்பவன், தப்பிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான். எல்லாமே, ஒர் எதிர்பார்ப்பிலேயே ஓடிக்கொண்டிருப்பதால்... எல்லோரும் ஒரு வாழ்க்கைக்காக.....
ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக அனைத்தும் இருந்தும் ஒரு துறவு மனப்பான்மையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒப்புக்கான வாழ்கிற வாழ்க்கையாகவே எல்லோருடைய வாழ்க்கையும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. நாம்தான் மற்றவர்கள் நம்மை விட நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். காலச்சக்கரம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் வைத்து சுழன்று கொண்டிருக்கின்றது.
- பொதிகைத்தமிழரசன்
Everyone has a dream... and they are struggling in various ways to achieve it. In the present time, they are constantly running, pushing aside their desires, likes, and dislikes. Their lives are passing by in this pursuit, believing that achieving that dream is their ultimate goal and purpose. When they look at others, they think that those people are living happier and more fulfilling lives than themselves. But they don't realize that these others are also running towards some dream, just like them. Only the perspective and the way of life differ; no one can truly say that they have attained complete happiness. The one who has earned a fortune is running after position and power. The one trapped within the web of power, having lost his peace of mind, is struggling, unable to find a way out. Because everything is driven by expectations... everyone is living for a life they desire.
Despite having everything, they are living with a sense of detachment. Everyone's life is moving forward as if it were a life lived merely for the sake of appearances. We are the ones who think that others are living better lives than us. The wheel of time keeps spinning, placing each person in a different perspective.
- Pothigai Tamilarasan