மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் மற்றும் அதனால் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறவி அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நேற்று தொலைபேசி வாயிலாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக ,மேற்காசிய பகுதிகளில் மோதல்களால் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கவலைகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மோதலால் உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இரு அமைச்சர்களும் தொடர்ந்து இது குறித்து தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டனர் .அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்ஈ ரானிய எரிசக்தி உள் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவித்த சில மணி நேரங்களிலே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.