
திரௌபதி, டூ லேட், மண்டேலா ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஷீலா, நடுக்கடலில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நேரடியாக டிவியில் வெளியான யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்திலும் ஷீலா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகை ஷீலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடுக்கடலில் ஒருவருடன் மாலையுடன் இருக்கிறார் நடிகை ஷீலா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டதாகவும், நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவர்தான் ஷீலாவின் கணவர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஷீலா திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.