சென்னையில் 23 வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18 வரை நடைபெற உள்ளது. 51 நாடுகள் பங்கேற்கும் இவ்விழாவில் 122 படங்கள் திரையிடப்பட உள்ளன. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் திரைத்துறை 50 ஆண்டுகால பங்களிப்பை கொண்டாடும் விதமாக பாட்ஷா திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. இவ்விழா, தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் நடத்துகிறது.