Advertiment

இன்றைய செய்தி

by Admin

தமிழகம்
இன்றைய செய்தி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உட்பட 14 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 'தித்வா' புயலின் எச்சத்தால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றக் கிளை மீண்டும் உத்தரவிட்டுள்ளதுடன், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று விழுப்புரம் செல்கிறார்.
பிற செய்திகள்:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 7 ஆம் தேதி ஒரு லட்சம் பட்டாக்களை வழங்க உள்ளாா்.

சென்னைக் கோட்டத்தில் 2வது புதிய சரக்கு ரயில் முனையம் திறக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்கள் நிரப்பப்பட்ட படிவங்களை கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Share via