Advertiment

இன்று கார்த்திகை தீபத்திருநாள்.

by Admin

ஆன்மீகம்
இன்று கார்த்திகை தீபத்திருநாள்.

 

இன்று கார்த்திகை தீபத் திருவிழா. திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படும் புனித நாள். இன்று அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழர்களின் இல்லம் முழுவதும் இன்று மாலை 6.00 மணிக்கு தீபம் ஏற்றி தீபத் திருவிழாவை மக்கள் கொண்டாடி மகிழ்வர். அக்னி ஸ்தலமாக கருதப்படுகின்ற திருவண்ணாமலை மிகப் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுவது பொழுதிலே ஒவ்வொரு இல்லங்களிலும் திருவிழா இயற்றப்படும். இருளை அகற்றி புதிய வசந்த வாழ்வை வெளிச்சங்களாக வீட்டிற்குள் கொண்டுவரும் புனித நாள் இது.

 வீட்டின் நான்கு திசைகளிலும் விளக்குகள் சுடர் விட்டு எரிய வேண்டும். வீட்டு முற்றத்தில் நன்கு அழகிய கோலமிட்டு அதில் ஆறுக்கு மேற்பட்ட விளக்குகளை ஏற்றி எரிய விடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபத் திருவிழா சிவபெருமானின் அடிமுடி தேடிய புராணக் கதையுடன் தொடர்புடையது. இதில் அவர் அக்னி பிளம்பாக காட்சி தந்தார் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதாக நம்ப படுகின்றது. இந்த மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு 11 நாட்களுக்கு தொடர்ந்து அது எரியும். மகா தீபமானது 268 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏழு அடி உயரம் கொண்ட கொப்பறையில் ஆயிரம் கிலோ நெய்யும் ஆயிரம் மீட்டர் காலா துணியும் கிரியாக பயன்படுத்தப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

 

Share via