Advertiment

டிசம்பர் மூன்றாம் தேதி மகா தீப த்திரு விழா நடைபெறுகிறது.

by Admin

ஆன்மீகம்
டிசம்பர் மூன்றாம் தேதி மகா தீப த்திரு விழா நடைபெறுகிறது.

பஞ்சபூதங்களில் ஒன்றாக சொல்லப்படும் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை. சிவபெருமான் அக்கினியாக இருந்து காட்சி தந்து தன்னை வழிபடுவதற்குரிய அவர்களுக்கு உரிய பாவங்களை எல்லாம் பஸ்பம் ஆக்கி அவர்கள் வாழ்வில் ஒளிச்சுடராக நின்று பிரகாசிக்க வைக்கின்ற வாழ்வை தரும் பொழுதாக இந்த கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடுவோருக்கு சகல துன்பங்களையும் நீக்கி இறைவன் பேரருள் புரிவான் என்பதுதான் ஐதீகம். நவம்பர் 24ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நவம்பர் 27 அன்று வெள்ளி கற்பக விருட்சம் வெள்ளி காமதேனு வாகனத்தில் உலா , 28 ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் வருவது 29ஆம் தேதி வெள்ளி ரகத்தில் வருவது 30ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் மகா ரத்தத்தில் வருதல் என தொடங்கி டிசம்பர் மூன்றாம் தேதி மகா தீப த்திருவிழா நடைபெறுகிறது. மகா தீபம் தீபத்திருநாளுக்கு முன்னதாக 2,668 அடி உயரம் கொண்ட மலையில் மிகப் பிரமாண்ட கொப்பரையில் நெய் ஊற்றி மிகப்பெரிய திரி செய்யப்பட்டு அதில் தீபம் ஏற்றுவர். இத்தீபத் திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்த இறை பக்தர்கள் வருகை புரிவர். அன்று திருவண்ணாமலை பகுதிகள் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும்

Share via